விருந்துக்கு பெண்ணை அழைத்து பலாத்காரம் செய்து கொலை

எங்கு தன்னை காட்டி கொடுத்து விடுவாரோ என்ற பயத்தில் கழுத்தை அறுத்து அவர் கொலை செய்ததாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Nov 18, 2023 - 16:13
Nov 18, 2023 - 17:50
விருந்துக்கு பெண்ணை அழைத்து  பலாத்காரம் செய்து கொலை

உறவினர் வீட்டு விருந்துக்கு அழைத்து வர சொன்ன பெண்ணை விடாமல் நான்கு முறைக்கு மேல் பலாத்காரம் செய்து கழுத்தறுத்துக்கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள கொசுவபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சர்மிளா சென்னையில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவரது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனது தாய் மாமாவான புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சு பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் வீட்டில்தான் இருந்துள்ளார்.  

தீபாவளி விடுமுறைக்காக தச்சங்குறிச்சியில் உள்ள தாய்மாமா பிரபு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் நாட்டாணியில் கடந்த வெள்ளிக்கிழமை பிரபு மனைவியின் தங்கைக்கு வளையகாப்பு நிகழ்ச்சிக்கு பிரபு உள்ளிட்டோர் சென்று விட்டனர். வீட்டில் சர்மிளா மட்டும் தனியாக இருந்து வந்துள்ளார்.இதனால் தன்னை அழைத்துச் செல்லுமாறு பிரபுவிடம் ஷர்மிளா கைபேசி மூலம் கூறியுள்ளார்.

வேலை காரணமாக பிரபு தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் கருப்புசாமியை அனுப்பி சர்மிளாவை அழைத்து வருமாறு கூறியுள்ளார். கருப்பசாமி மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை ஷர்மிளாவை அழைத்து வந்துள்ளார். இதனிடையே ஷர்மிளாவும், கருப்பசாமியும் நீண்ட நேரம் வராததால் சர்மிளாவின் கைபேசிக்கு பிரபு தொடர்பு கொண்டபோது, இருவரும் நாட்டாணி அருகே வந்து கொண்டிருப்பதாக கருப்பசாமி கூறியுள்ளார். 

ஆனால் வெகு நேரமாகியும் நாட்டாணிக்கு வராததால் சந்தேகமடைந்த பிரபு கைப்பேசி மூலம் சர்மிளாவுக்கும் - கருப்பசாமிக்கும் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் இருவரது கைபேசிகளும் அணைக்கப்பட்டிருந்து.இந்த நிலையில் கருப்பசாமி பிரபுவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரும் வழியில் நான்கைந்து பேர் தங்களை தாக்கி சர்மிளாவை கடத்திச் சென்றதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு உறவினர்களுடன் அவர்களை தேடத் தொடங்கினர். 

அப்போது,தஞ்சாவூர் மாவட்டம் நாட்டானி அருகே உள்ள முதலை முத்துவாரி நீர்த்தேக்கம் பகுதியில் சர்மிளா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு உடனடியாக தஞ்சை வல்லம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கருப்பசாமிதான் ஷர்மிளாவை கற்பழித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இருந்து சர்மிளாவை அழைத்து வந்த போது நேரடியாக நாட்டாணிக்கு செல்லாமல் முதலை முத்துவாரி நீர் தேக்கத்திற்கு அழைத்து சென்று சர்மிளாவை தொடர்ந்து நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் வலி தாங்க முடியாத சர்மிளா என்னை விட்டு விடுமாறும், இல்லையென்றால் ஊரில் சொல்லிவிடுவேன் என கூறியுள்ளார்.இதனால் எங்கு தன்னை காட்டி கொடுத்து விடுவாரோ என்ற பயத்தில் கழுத்தை அறுத்து அவர் கொலை செய்ததாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow