வண்டி டயர் வெடிச்சா என்ன? "தக்காளிய எடுங்கல"... மூட்டை மூட்டையாய் அள்ளி சென்ற மக்கள்...
திண்டுக்கல்லில் தக்காளி லோடு ஏற்றி வந்த மினி வேனின் டயர் வெடித்து நட்ட நடு சாலையில் கவிழ்ந்த நிலையில், கொட்டிய தக்காளிகளை அப்பகுதி மக்கள் சாக்கு பைகளில் அள்ளிச் சென்றனர்.
தருமபுரி மாவட்டம் அரூரில் இருந்து சுமார் 100 பெட்டிகளில் 3 டன் தக்காளி லோடு ஏற்றிக் கொண்டு மினி வேன் ஒன்று புறப்பட்டது. இந்த வேனை அரூரை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் ஓட்டி வந்தார். வண்டி திண்டுக்கல் மாவட்டம் கல்வார்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்தப் போது, திடீரென பின்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், திண்டுக்கல் 4 வழிச்சாலையில் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த தக்காளிகள் நட்ட நடு சாலையில் கொட்டியது.
இந்த தகவல் விபத்து நடந்த பகுதி அருகே உள்ள கல்வார்பட்டி கிராம மக்களிடம் பரவிய நிலையில், பலரும் போட்டி போட்டுக் கொண்டு தக்காளியை சாக்கு பைகளில் அள்ளிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மக்களை கலைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
What's Your Reaction?