அமித்ஷா இன்று மைசூர் வருகை- பலத்த போலீஸ் பாதுகாப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மைசூர் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Feb 10, 2024 - 06:40
Feb 10, 2024 - 09:52
அமித்ஷா இன்று மைசூர் வருகை- பலத்த போலீஸ் பாதுகாப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடக மாநில பாஜக தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களுடன் மைசூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மைசூர் செல்கிறார். இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூர் செல்லும் அவர், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

நாளை( ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று அங்கு நடைபெறும் சிறப்புப் பூஜையில் அவர் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பாஜக தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

பின்னர் சுத்தூரில் நடைபெற்று வரும் நடைபெறும் திருவிழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளார். அதைத்தொடர்ந்து அன்றைய தினமே தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். மைசூருக்கு அமித்ஷா வருகை தருவதால் மண்டகள்ளி விமான நிலையம், நட்சத்திர ஓட்டல், சாமுண்டீஸ்வரி மலைக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மைசூருக்கு அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow