"5 நிமிஷத்துல கிளம்புன்னா கேக்க மாட்ட?" ஆம்ஆத்மி அமைச்சரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பிரதமர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஆத்மி அமைச்சர் ஹர்தோக் சிங் போலீசாரால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. தொடர்ந்து சிறையில் இருந்தும் முதலமைச்சராக அவர் பதவி வகிப்பார் என ஆம்ஆத்மி அறிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லி ஷஹீதி பூங்காவில் இருந்து, மக்கள் இயக்கம் என்ற பெயரில் பேரணியாக சென்று, பிரதமர் நரேந்திர மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஆம்ஆத்மி அறிவித்தது. இந்நிலையில் போராட்டதிற்கு அனுமதி இல்லை எனக்கூறி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,சில மெட்ரோ சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனையும் மீறி போராட்டக்காரர்கள் அப்பகுதியில் குவிந்தனர். 5 நிமிடத்தில் அனைவரும் இடத்தை காலி செய்ய வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால், ஆம்ஆத்மி எம்.பி ஹர்ஜோத் சிங் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?