திருமணம் செய்வதாக கூறி 17 வயது சிறுமி பலாத்காரம்... வாலிபருக்கு 20 ஆண்டு சிறை...
சிறுமியிடம் பள்ளிச் சான்றிதழை எடுத்து வருமாறு கூறி அபின் விஜய் வீட்டார் சிறுமியை வீட்டை விட்டு துரத்தி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 5000 அபராதம் மிதித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காக்கா தோப்பு பகுதியை சேர்ந்தவர் அபின் விஜய். இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அபின் விஜய் செருவாரக்கோணம் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியை காதலித்ததாக தெரிகிறது.
இதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் முடிந்த தகவல் அறிந்த அபின் விஜய் சிறுமியை சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 11.11 2016 அன்று தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி இதை பெற்றவுடன் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் சிறுமியை அபின் விஜய் வீட்டிற்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தும் படி கூறியதை தொடர்ந்து கடந்த 13.11.2016 சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அபின் விஜய் உடன் சிறுமி வசித்து வந்த நிலையில் அவரை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்த மாட்டேன் என்றும் தன்னை பதிவு திருமணம் செய்ய வேண்டும் என்று சிறுமி கேட்டுள்ளார். அதற்கு சிறுமியிடம் பள்ளிச் சான்றிதழை எடுத்து வருமாறு கூறி அபின் விஜய் வீட்டார் சிறுமியை வீட்டை விட்டு துரத்தி உள்ளனர். இது தொடர்பாக சிறுமி கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அபின் விஜய்க்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரையா உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் லிங்க்சன் ஆஜராகி வாதாடினார்
What's Your Reaction?