தமிழ்நாட்டை உலுக்கிய கொலை வழக்கு... 4 மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மானவர்கள் நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dec 2, 2024 - 13:35

சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவர் சுந்தர், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு கடந்த அக்டோபர் 9ஆம் தேதி மாணவர் சுந்தர் மரணம் அடைந்தார். இதையடுத்து,  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக  கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

கைது செய்யப்பட்டவர்களில் சந்துரு, ஈஸ்வர், ஈஸ்வரன் மற்றும் யுவராஜ் ஆகிய நான்கு பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நான்கு மாணவர்களுக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதி ராஜீவ் காந்தி நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார். மேலும்,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மாணவர்கள் 4 பேரும் பணியாற்ற வேண்டுமென நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

காலை 10 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை பணிபுரிய உத்தரவிட்ட நீதிபதி இது தொடர்பாக அறிக்கை அளிக்க மருத்துவ அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் பச்சையப்பன்  மற்றும் மாநிலக் கல்லூரி முதல்வர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow