ஆய்வுக்கு சென்ற இடத்தில் முதலமைச்சர் போட்ட உத்தரவு - கலங்கி நிற்பவர்களுக்கு கைகொடுத்த அரசு

உயர்கல்வியில் சேருவோர் இந்திய அளவில் 33 % பேர் என்றும் அதுவே தமிழக அளவில் 66 % என்றும் அதுவே விருதுநகர் மாவட்டத்தில் 98 % சதவீதம் பேர் உயர் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது பாராட்டுக்கு உரியது என்றார்.

Nov 10, 2024 - 14:11
ஆய்வுக்கு சென்ற இடத்தில் முதலமைச்சர் போட்ட உத்தரவு - கலங்கி நிற்பவர்களுக்கு கைகொடுத்த அரசு

பட்டாசு விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான படிப்பு செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 77.12 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 6 தளங்கள் கொண்ட புதிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் இருக்கையில் ஆட்சியர் ஜெயசீலனை அமர வைத்தும் கூட்ட அரங்கில் அமர்ந்து முதல் கூட்டத்தையும் தொடங்கி வைத்தார்.பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே கூடியிருந்த பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பட்டம்புதூரில் நடைபெற்ற  அரசு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வு குறித்த கண்காட்சி மற்றும்  அதனை தொடர்ந்து பல்வேறு அரசுத்துறைகளின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கண்காட்சியினையும் பார்வையிட்டு, விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் வருவாய்த்துறை வணிகவரி மற்றும் பதிவுத்துறை, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் ரூ.321.98 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.98.47 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 35 புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும் பல்வேறு துறைகளின் கீழ் ரூ.417.21 கோடி மதிப்பீட்டில் 57 ஆயிரத்து,556 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 837.66 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் வழங்கினார். 

மேலும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்  பேசிய முதலமைச்சர், பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஆயத்த ஆடை தொழிற் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது என்றும் மாவட்டம் முழுவதும் 1286 கிராமங்களுக்கு  1387 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் அனைத்து வளர்ச்சி திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் உயர்கல்வியில் சேருவோர் இந்திய அளவில் 33 % பேர் என்றும் அதுவே தமிழக அளவில் 66 % என்றும் அதுவே விருதுநகர் மாவட்டத்தில் 98 % சதவீதம் பேர் உயர் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது பாராட்டுக்கு உரியது என்றார்.மேலும் பட்டாசு தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின்  குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான கல்விச் செலவை அரசே ஏற்கும்,இதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியரை தலைமையாக கொண்டு தனி நிதியம் ஆரம்பிக்கப்பட்டு முதல்கட்டமாக ரூ 5 கோடி ஒதுக்கப்படும் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow