“எதற்காக இந்த திடீர் மேக்கப், யாரை ஏமாற்ற  முயல்கிறீர்கள்”- அரசு அதிகாரிகளை டோஸ் விட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்

ஆவணங்களை சரி பார்ப்பதற்கோ அல்லது அதை சரி என்று சொல்லி செல்வதற்கோ நாங்கள் இங்கு வரவில்லை

Nov 10, 2024 - 13:53
“எதற்காக இந்த திடீர் மேக்கப், யாரை ஏமாற்ற  முயல்கிறீர்கள்”- அரசு அதிகாரிகளை டோஸ் விட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்

நெல்லையில் ஆய்வுக்கு சென்ற இடத்தில் அதிகாரிகள் சொன்ன பதிலை கேட்டு சென்னை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், உங்கள் பதிலை கேட்டு கேட்டு புளித்துப் போய்விட்டதாக டோஸ் விட்டனர்.

தென் தமிழகத்தின் ஜீவாதார நதியான தாமிரபரணி நதியில் அதிக அளவிலான கழிவுகள் கலப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து பலமுறை அரசுக்கு கேள்வி எழுப்பியும் உரிய பதில் கிடைக்காததை எடுத்து கடந்த வாரம் நாங்கள் நேரில் ஆய்வு செய்ய வருவதாக நீதிபதிகள் புகழேந்தி மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் தெரிவித்திருந்தனர். 

இதனை அடுத்து அவசரகதியாக நெல்லை மாநகராட்சி தரப்பில் ஜேசிபிகள், புல்டோசர்கள் கொண்டு தாமிரபரணி ஆற்றில் கழிவுகளுக்கும் இடங்களில் மேக்கப் செய்யும் வேலைகளை துவங்கியது.மொத்தம் 17 இடங்களில் மாநகராட்சி தரப்பில் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலக்கும் நிலையில் இதுகுறித்து இன்று காலை நேரில் ஆய்வு செய்ய நீதிபதிகள் இருவரும் கிளம்பினர்.

நெல்லை கைலாசபுரம் பகுதிக்குச் சென்ற அவர்களுக்கு அங்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அவசரகதியில் கட்டப்பட்ட தடுப்பு சுவர் ஒன்றிலிருந்து நீர் எவ்வாறு சுத்திகரிக்கப்பட்டு வெளியே செல்லும் என கேள்வி கேட்டவர்களுக்கு, அங்கு இருந்த பொறியாளர் தான் நேற்று தான் பணியில் சேர்ந்து இருப்பதாக கூறி முதல் அதிர்ச்சியை அளித்தார். அருகில் நின்று கொண்டிருந்த மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திரா-வை நோக்கி நீங்கள் கொண்டுவரும் ஆவணங்களை சரி பார்ப்பதற்கோ அல்லது அதை சரி என்று சொல்லி செல்வதற்கோ நாங்கள் இங்கு வரவில்லை எனவும் நேரில் வந்த எங்களுக்கு களத்தில் இறங்கி ஆய்வு செய்யவும் தெரியும் என டோஸ் விட்டனர்.இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக  நீதிபதிகளை வரவேற்று விட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் காணாமல் போனார். மேலும் ஆய்வின் போது  மேயர் துணை மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓடி ஒளிந்ததாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஜீவாதார நதியான தாமிரபரணி வருடத்தின் 375 நாட்களிலும் தண்ணீர் செல்லும் நிலையில், இங்கு அருகில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் முறை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறதோ, உடன் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளை இது செழுமைப்படுத்தி செல்லும் ஓர் ஜீவாதார நதியாகும்.சாதாரண ஒரு குடிமகனின் நினைத்ததை நீதிபதிகள் கேள்வியாக எழுப்பிய பின்னாவது தாமிரபரணியில் மாசு கலப்பதை மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளுமா என்பது பலரின் கருத்தாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow