விக்ரமின் தங்கலான் VS பிரசாந்தின் அந்தகன்... போட்டிக்குப் போட்டியாக அறிவிப்பு... இதுதான் காரணமா?
சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகிறது, அதேநாளில் பிரசாந்தின் அந்தகன் படமும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தங்கலானுக்குப் போட்டியாக தான் அந்தகன் படம் வெளியாகவுள்ளதாகவும், அதற்கான காரணம் பற்றியும் வெளியான தகவல் வைரலாகி வருகிறது.
சென்னை: பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தங்கலான் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் தங்கலான் ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு நேற்று அறிவித்திருந்தது. அதன்படி, இந்தப் படம் சுதந்திர தினம் ஸ்பெஷலாக ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது.
தங்கலான் ரிலீஸ் தேதி பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியான சில மணி நேரங்களிலேயே பிரசாந்தின் அந்தகன் வெளியீடு குறித்தும் அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரசாந்தின் அந்தகனும் தங்கலான் வெளியாகும் அதே ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகிறது. இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள அந்தகன் படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் ஆகாமல் கிடப்பில் இருந்த அந்தகன், தங்கலானுக்குப் போட்டியாக வெளியாகவுள்ளது தான் கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
அதாவது விக்ரமிற்கு எதிராக தான் அந்தகன் ரிலீஸ் தேதியை தியாகராஜன் அறிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் குடும்ப பஞ்சாயத்தை சினிமாவிலும் கொண்டு வந்து வேடிக்கை பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி சமூக வலைத்தளங்களிலும் ஒரு பதிவு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த பதிவு, “குடும்ப பஞ்சாயத்தை நடிகர் பிரசாந்த் மறக்க தயாராக இல்லை போல, தியாகரஜனும்” என தொடங்குகிறது. மேலும், விக்ரமின் சாமி மூவி வெளியான அதேநாளில் பிரசாந்தின் ஜெய் திரைப்படம் ரிலீஸானது. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் மெகா ஹிட்டான ஆதியின் ரீமேக் தான் பிரசாந்த் நடித்த ஜெய்.
இப்போது விக்ரமின் தங்கலான் வெளியாகும் அதேநாளில் அந்தகன் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் ரீமேக் படம் தான் என்றாலும், அறிவித்தபடி அந்தகன் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தங்கலான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட ஈரம் காய்வதற்குள் அந்தகன் படத்தின் அப்டேட்டையும் அவசரமாக வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்..? ஒரு காதல், பலத்த எதிர்ப்பு, எனவே வீட்டை விட்டு வெளியேறி திருமணம்... அதனால் ஏற்பட்ட கசப்பு, பகையை மூன்றாவது தலைமுறையிலும் தொடரப் போகிறார்களா..? என்ற கேள்வியுடன் அந்த பதிவு முடிகிறது.
விக்ரம், பிரசாந்த் இருவரும் உறவினர்கள் என்பது ரசிகர்களுக்கு ஓரளவு தெரிந்தாலும், ஏன் இந்த பகை, யாருடைய காதல் திருமணம் என பெரிய விவாதத்தையே தொடங்கிவிட்டனர். அதாவது தியாகராஜனின் தங்கை தான் சீயான் விக்ரம் அம்மா என சொல்லப்படுகிறது. அவர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதால், தியாகராஜனுக்கும் விக்ரமின் அம்மாவுக்கும் இடையே பேச்சுவார்த்தையே இல்லையாம். அதனால் தான் விக்ரமின் படங்களை டார்க்கெட் செய்து பிரசாந்த் படங்களை வெளியிடுவது தொடர்கதையாகிறது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹரியின் முதல் படமான தமிழில் ஹீரோவாக பிரசாந்த் நடித்திருந்தார். அதில் பிரசாந்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் ரொம்பவே வைரலானது. அதேபோல் தான் சாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் விக்ரமின் கெட்டப் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதைவிட முக்கியமானது சாமி படத்தையும் ஹைரி தான் இயக்கியிருந்தார்.
What's Your Reaction?