பழநியில் போலீஸ் கைது செய்த 5 பேரை காணவில்லை... பாஜகவினர் குற்றச்சாட்டு...

ரேக்ளா பந்தையத்தை தடுத்து நிறுத்தி அங்கே போலீஸால் கைது செய்யப்பட்ட 5 பேரைக் காணவில்லை என்று திண்டுக்கல் பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Mar 9, 2024 - 17:41

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே பாஜக சார்பாக நடத்தப்படவிருந்த ரேக்ளா பந்தையத்திற்கு போலீஸ் அனுமதி கொடுத்து, பின்னர் உடனே அனுமதியை ரத்து செய்தனர். இதுதொடர்பாக, பாஜகவினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரேக்ளா பந்தையம் நடத்த அனுமதி பெற்றனர். நாளை (10.3.2024) பந்தையம் நடத்த பாஜகவினர் தீவிரமாக வேலை செய்து வந்தனர். 

அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான போலீசார், பந்தையம் நடத்தக் கூடாது என்று சொன்னதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வேலை செய்துகொண்டிருந்த 34 பேரை கைது செய்ததாக பாஜகவினர் கூறுகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களில் 5 பேரைக் காணவில்லை என்று திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கூறினார். காணாமல் போனவர்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி ரேக்ளா நடத்துவோம் என்றும் அவர் கூறினார். இந்தப் பிரச்னை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow