சென்னை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..மொத்தம் எத்தனை வாக்காளர்கள் இருக்காங்க தெரியுமா?
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 2025 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் சுரேஷ் வெளியிட்டார்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 2025 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் சுரேஷ் வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4,5,6,8,9,10,13 மற்றும் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டிலின் படி சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 19,41,271 நபர்களும், பெண் வாக்காளர்கள் 20,09,975 நபர்களும் மற்றும் இதர வாக்காளர்கள் 1,252 நபர்களும் என மொத்தம் 39,52,498 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
மேலும் 25,628 ஆண் வாக்காளர்கள், 27,669 பெண் வாக்காளர்கள் மற்றும் 62 இதர வாக்காளர்கள் என மொத்தம் 53,359 வாக்காளர்களின் பெயர்கள் புதியதாக பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் 12,818 ஆண் வாக்காளர்கள், 13,178 பெண் வாக்காளர்கள் மற்றும் 9 இதர வாக்காளர்கள் என மொத்தம் 26,005 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?