கொள்ளளவை எட்டிய குதிரையாறு அணை… அபாய எச்சரிக்கை விடுத்த பொதுப்பணித்துறை!
பழனி அருகே தொடர் மழை காரணமாக குதிரை ஆறு அணை முழு கொள்ளளவு எட்டி உள்ளதால் கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், தொடர் மலை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பழனி அருகே உள்ள வரதமா நதி, பாலாறு பொருந்தலாறு அணை , குதிரையாறு அணைகள் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இதனிடையே, நேற்று முன்தினம் 66 அடி கொள்ளளவு கொண்ட வரதமா நதி அணை நிரம்பியது.
இந்நிலையில் பாலாறு அணைக்கும், குதிரையாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குதிரையாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 80 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குதிரையாறு அணை ஒட்டி உள்ள கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை பொதுப்பணி துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் கரையோர பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
What's Your Reaction?