என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா வீட்டில் சோதனை- போலீஸ் குவிப்பு
சேலையூர், மப்பேடு, கஸ்பாபுரம், மாடம்பாக்கம் உள்ளிட்ட 14 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய 14 இடங்களில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
நில மோசடி வழக்கு தொடர்பாக என்கவுன்டர் செய்யப்பட்ட சீசிங் ராஜா வீடு உட்பட 14 இடங்களில் பள்ளிகரனை துணை ஆணையர் தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை துணை ஆணையாளர் கார்திகேயன் தலைமையிலான உதவி ஆணையாளர்கள், 14 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட போலீசார் நில மோசடியில் ஈடுபட்டதாக முக்கிய குற்றவாளிகளின் வீடுகள் மற்றும் உறவினர் இல்லங்கள் என 14 இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் அடுத்த ராமகிஷ்ணாபுத்தில் என்கவுன்டர் செய்யபட்ட சீசிங் ராஜா வீட்டில் உதவி ஆணையாளர் வைணவி தலைமையில் போலீசார் நில ஆவணங்கள் உள்ளதா என குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் சேலையூர், மப்பேடு, கஸ்பாபுரம், மாடம்பாக்கம் உள்ளிட்ட 14 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. காவல்துறையும், வருவாய்துறையினரும் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சோதனை காரணமாக சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?