"வெட்டுனா தலை துண்டாகிவிடும்"... தாசில்தாரை மிரட்டிய இளைஞர்...
2 பேர் மீது கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே அரசு நிலத்தில் இருந்து ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற தாசில்தாரை, இளைஞர் ஒருவர் "வெட்டுனா தலை துண்டாகிவிடும்" என மிரட்டல் விடுக்கு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளையனூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி. இவர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியுள்ளார். இதுகுறித்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், பல முறை புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில், அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், நிலத்தை அளந்து ஜே.சி.பி மூலம் ஆக்கிமிரப்பு செய்து கட்டப்பட்ட வீட்டை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றினார்.
அப்போது, அங்கு வந்த சுப்பிரமணியின் மகன் புனிதன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் பல முறை கூறியும் காது கொடுத்து கேட்காத புனிதன், ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளிவிட்டார். ஒரு கட்டத்தில் எல்லை மீறி, அங்கிருந்த தாசில்தாரை "வெட்டுனா தலை துண்டாகிவிடும்" என மிரட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், புனிதன் மற்றும் சகோதரர்கள் 2 பேர் மீது கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அரசு ஊழியர்கள் பணியை செய்யவிடாமல் தடுத்தது, அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?