காலியாகும் அதிமுக கூடாரம்... மாஜிக்களை தட்டித்தூக்கிய விஜய்..!
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அமமுகவைச் சேர்ந்தவர்கள் என கொத்து கொத்தாக தவெக இணைந்து வருவதால், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்க்காத முடிவாகவே அமைந்தது. குறிப்பாக, திமுக Vs அதிமுக கான்சப்டையே அடித்து துவம்சம் செய்தது தவெக. அதாவது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் யாருமே அசைக்க முடியாத சக்திகளாக இருந்த இருபெரும் திராவிடக் கட்சிகளையும் ஒரே அணியில் அமரவைத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார் விஜய்.
கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி, திமுக அமைச்சரவையில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் தோல்வி, கோட்டையான சென்னையை இழந்தது என அடிக்கு மேல் அடி வாங்கியது திமுக. இருந்தும் ஏதோ சமாளித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டது. ஆனால், மறுபக்கம் அதிமுகவோ எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்ததோடு, கட்சி இரண்டாகப் பிளவுப்பட்டு, மீண்டும் கஷ்டப்பட்டு ஒன்றாகியுள்ளது. ஆனால் எடப்பாடியார் தலைமை மீது அதிருப்தியில் இருப்பவர்கள் தொடர்ந்து கட்சியில் நீடித்தாலும், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டுள்ள மாஜிக்கள் சிலர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகும் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெகவில் இணையும் பிரமாண்டமான இணைப்பு விழா இன்று(ஜூன் 06) நடைபெற்றது.
இதில் அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இத்தகையச் சூழலில், விஜய்பாஸ்கர், சிவி சண்முகம் போன்ற இன்னும் சில மாஜி அமைச்சர்கள் தவெக இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
What's Your Reaction?