கடன் வழங்கி மிரட்டுபவர்களுக்கு செக்.. சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் உதயநிதி
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு.

தமிழ்நாடு பணக்கடன்கள் வழங்குபவர்கள் சட்டத்தை திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமுன்வடிவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தனிநபர்கள், தனி நபர்கள் குழு, சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கடன்கள் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளால் சமீப காலங்களாக பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில், வலுக்கட்டாய கடன் வசூலிப்பு முறைகளில் இருந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமுன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் இன்று செய்யப்பட்டுள்ளது.
சட்ட முன்வடிவின் சிறப்பம்சங்கள்:
இந்த சட்டத்திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறைதீர்ப்பாளரை அரசு நியமிக்கலாம். கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்ட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது.
கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்காட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். வலுக்கட்டாய நடவடிக்கைகளால் கடன்பெறுபவர் அல்லது அவரது உறுப்பினர்கள் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால் கடன் கொடுத்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படுவார்கள்.
இச்சட்டமுன்வடிவின் படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் பிணையில் வெளிவரமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: CSK தோல்வி.. மகிழ்ச்சியில் துள்ளிய காவ்யா மாறனை விமர்சித்த முன்னாள் அமைச்சர்
What's Your Reaction?






