TNPSC தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ்- தமிழக அரசு அதிரடி உத்தரவு
குரூப் 4 பணியிடங்களுக்கு கூடுதலாக 2208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கு கூடுதலாக 2208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 6,244 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 7,247 மையங்களில் சுமார் 15.88 லட்சம் பேர் எழுதினர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இத்தேர்வை பட்டதாரிகள் முதல் முதுகலை பட்டதாரிகள் வரை எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில், குரூப்-4 காலி பணியிடங்கள் 10 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதலாக 2208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 480 இடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டு பணியிடங்கள் எண்ணிக்கை 6724 ஆக அதிகரிக்கப்பட்டது.தற்போது மொத்தம் 8,932 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
What's Your Reaction?