Wrestle Mania: 17 வது முறையாக WWE சாம்பியன்.. ரிக் ஃபிளேரின் சாதனையை முறியடித்த ஜான் சீனா

WWE WrestleMania 41-ல் கோடி ரோட்ஸை வீழ்த்தி ஜான் சீனா 17 வது முறையாக WWE சாம்பியன் பட்டத்தை வென்று ரிக் ஃபிளேரின் சாதனையினை முறியடித்துள்ளார்.

Apr 21, 2025 - 11:17
Wrestle Mania: 17 வது முறையாக WWE சாம்பியன்.. ரிக் ஃபிளேரின் சாதனையை முறியடித்த ஜான் சீனா
john cena wins his 17 th world title at wwe wrestlemania 41

90-ஸ் கிட்ஸ்களின் பேவரைட்ஸ் என ஒரு பட்டியலிட்டால் அதில் WWE நிச்சயம் இருக்கும். அந்த வகையில் 90-ஸ் கிட்ஸ்களின் ரத்தத்தில் ஊறிப்போயிருந்த ஒரு விஷயம் WWE. இந்திய நேரப்படி நள்ளிரவு நேரம் WWE WrestleMania 41-வது தொடர் நடைப்பெற்றது.

WrestleMania தொடருடன் WWE போட்டிகளில் ஓய்வு பெறப்போவதாக ஜான் சீனா அறிவித்த நிலையில், இன்று நடைப்பெற்ற அவரது போட்டி பெரும் எதிர்பார்ப்பினை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.

கோடி ரோட்ஸை சீனா வீழ்த்தியது எப்படி?

போட்டி தொடங்கியது முதலே, கோடி ரோட்ஸ் ஆதிக்கம் செலுத்தி வந்தார். WWE-ல் ஜான் சீனாவுக்கு இது வழக்கமான பாணி தான். நம்மூர் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் அடிவாங்கிவிட்டு திருப்பி தருவது போல தான், அமெரிக்காவில் ஜான் சீனா. போட்டி முடியும் கடைசி நொடி வரை நன்றாக அடி வாங்குவார். அப்படி தான் இந்த போட்டியிலும் அடி வாங்குவது, திருப்பி தருவது என போயிட்டு இருந்த சமயத்தில் டிராவிஸ் ஸ்காட் தீடீரென்று உள்ளே வந்தார்.

கோடி ரோட்ஸ் ஜான் சீனாவை விட்டுட்டு, டிராவிஸ் ஸ்காட்டை அடித்துக் கொண்டு இருந்தார். இந்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்திக் கொண்டார், ஜான் சீனா. நடுவர் கீழே இருந்த சமயம், WWE பெல்ட் கொண்டு கோடி ரோட்ஸ் ஜான் சீனாவை தாக்க முயன்றார். ஆனால், ஜான் சீனா கெஞ்சுவது போல் பாவனை செய்தார். இதை நக்கல் தொனியில் கோடி ரோட்ஸ் பார்த்து சிரிக்கும் சமயம், உயிர் நாடி இடத்தில் டக்கென்று கோடி ரோட்ஸை தாக்கி நிலைகுலைய செய்தார் ஜான் சீனா. நடுவர் எந்திரித்து வளையத்திற்குள் வருவதற்குள் பெல்ட்டால் தாக்கியினார் ஜான் சீனா. போட்டியும் முடிவுக்கு வந்தது.

கோடி ரோட்ஸை வீழ்த்தி 17 வது முறையாக WWE சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார் ஜான் சீனா. 16 முறை WWE சாம்பியன் பட்டத்தை ரிக் ஃபிளேர் வென்றதை இதுநாள் வரை WWE-ல் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜான் சீனாவிற்கு முன்னாள் மல்யுத்த வீரர்கள், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow