ஆண்டுதோறும் வளர்ந்து வரும் அதிசய சிவலிங்கம் – கஜுராஹோ மதங்கேஷ்வர்!
மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவில் உள்ள மதங்கேஷ்வர் சிவலிங்கம், ஆண்டுதோறும் வளர்ந்து வரும் அதிசய ஜீவித லிங்கமாக பக்தர்களால் நம்பப்படுகிறது. புராணப் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இந்த ஆலயம், சிவபக்தர்களின் முக்கிய புனிதத் தலமாக விளங்குகிறது.
இந்தக் கலியுகத்தில் சிவ வழிபாட்டை விட மேலானது எதுவுமில்லை. அதேசமயம், நீங்கள் சிவனைக் கும்பிடக் கூட வேண்டாம்; எவர் இடைவிடாமல், 'ஓம் நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரத்தினை ஜபிக்கிறாரோ, அவரை தரிசித்தாலே போதும். அத்தகைய அடியவரின் பார்வையே மற்ற எல்லா உயிரினங்களையும் புனிதமாக்கிவிடும்.
இதைத்தான்,
ஷிவேதி மங்களம் நாம முகே யஸ்ய நிரந்தரம்!
தஸ்யௌவ தர்ஷநாதன்யே பவித்ரஹ: ஸந்தி ஸர்வதா! என்று குறிப்பிடுகிறது, மகாபாகவத உபபுராணம் [10.42]
சிவ ஸ்துதியை அப்படி இடைவிடாமல் உச்சரிக்க இயலுமா? அப்படிச் சொன்னவர்கள் இருக்கிறார்களா என்றால், இருக்கிறார்கள். அவர்களுள் மானிடர்கள் மட்டுமன்றி தெய்வங்கள், தேவதைகள், அசுரர்கள், ரிஷி முனிகள் என அனைவரும் அடங்குவர். இந்த அனைவரிலும் மேலானவர் நந்தியம்பெருமான். அவரே சிவபெருமானது உத்தம பக்தர் மற்றும் சீடர் என புராணங்கள் குறிப்பிடுகின்றன.
இப்படிப் பலரும் இடைவிடாது வழிபட்ட சிவலிங்கங்கள் நிறுவப்பட்ட முறைப்படி ஆறு வகையில் பிரிக்கப்படுகின்றன.
ஸ்வயம்பூ தானாகவே உதித்த லிங்கங்கள். திவ்ய அல்லது தெய்வீக லிங்கம் -தேவி,தேவர்கள் வழிபட்ட லிங்கம் புவியில் இன்றும் இருக்கின்றன. இக்காலத்தில் மானிடர்களால் வழிபடப்படுகின்றன. -மானுஷ்ய லிங்கம் பேரரசர்கள், மன்னர்கள், செல்வந்தர்கள் மற்றும் இறையருள் பெற்ற பக்தர்களால் இவை அனைத்தையும்விட மிகமிக உயர்வானது, ஜீவித லிங்கம். அதாவது இன்றும் ஜீவிக்கும் உயிர்கள் போல வளர்ச்சி மற்றும் உயிர்த் துடிப்புடன் இருக்கக் கூடிய லிங்கம். அந்த வகையில் ஒரே ஒரு லிங்கம்தான் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த ஜீவித லிங்கம் நிறுவப்பட்டவை.
அர்ஷக லிங்கம் பண்டைய நாள்களில் அகஸ்தியர் போன்ற ரிஷி முனிகளால் ஸ்தாபிக்கப்பட்டவை. ராக்ஷச லிங்கம் அசுர்கள் மற்றும்
ராட்சதர்களால் நிறுவப்பட்டவை -உதாரணம், இராவணன் ஸ்தாபித்தது. பாண லிங்கம் - கிடைப்பவை. நர்மதை பொதுவாக நர்மதை நதியில் விந்திய - சாத்புரா மலைகளுக்கிடையே தவழும் நீர்ப் பிரவாகம். வேகம் அதிகம். எனவே கற்கள் உருண்டு உருண்டு நல்ல வழுவழுப்புத் தன்மையை அடைகின்றன. கண்டகி நதியின் சாளகிராமங்கள் போல நர்மதை நதியின் பாணலிங்கங்கள் என இவை போற்றப்படுகின்றன.
மதங்கேஷ்வர லிங்கம் என்ற திருப்பெயருடன், மத்திய பிரதேசத்தின் கஜுராஹோவில் உள்ளது. மகரிஷி மதங்கர், அன்னை சபரிக்கு அடைக்கலம் தந்து அவருக்கு குருவாகவும் விளங்கியவர் என்பதை இராமாயணத்தில் கண்டிருக்கிறோம். மதங்கம் என்பது யானையைக் குறிக்கும் சொல். யானை பொதுவாக அறிவுக் கூர்மை மற்றும் ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்புடையது. ஞானமும் சிவபக்தியும் கொண்ட மதங்கருக்கு இது காரணப்பெயர் சொல்வோர் உண்டு! என்று
மதங்க என்பது அவரது வம்சத்தைக் குறிக்கும் சொல் எனக் குறிப்பிடுவோரும் உண்டு! ரிஷி மதங்கருக்கு
இன்றைய கேதார்நாத், வாராணசி, கயா மற்றும் கஜுராஹோ உள்ளிட்ட இடங்களில் பண்டைய காலத்தில் ஆசிரமங்கள் இருந்துள்ளன. வனவாசத்தின் போது பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர், சிவபெருமானை நினைந்து தவம் செய்தார். அவரது தவத்தை மெச்சிய ஈஸ்வரன், மரகத மணி ஒன்றை அவருக்குப் பரிசாக அளித்தார்.
அளவில்லா ஆற்றல்கள் நிரம்பிய அந்த மரகத மணியிலிருந்து எழும் ஒளிக் கற்றைகள் அனைத்து வியாதிகளையும் போக்கவல்லவை. மேலும் நேர்மறை எண்ணங்களையும் தோற்றுவிக்கக் கூடியவை. வனத்தில் வசித்ததாலும்; இடம்விட்டு இடம் நகர்ந்ததாலும் யுதிஷ்டிரர் அதனைப் பாதுகாக்க வேண்டி, மகரிஷி மதங்கரிடம் சமர்ப்பித்தார். கானகத்தில் அது களவுபோகாமல் இருக்க, மதங்கர் அதனை மன்னர் ஹர்ஷ்வர்தனிடம் ஒப்படைத்தார்.
அந்தக் கல்லின் ஆற்றலை உணர்ந்த ஹர்ஷ்வர்தன் அதை பூமியில் விதையாக விதைத்து மறைத்து வைத்தார். ஆனால் அவர் கொஞ்சமும் எதிர்பாராத அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. கல்லைவிதைத்த இடத்தில், சிவலிங்கம் ஒன்று முளைத்தெழத் தொடங்கியது. உயிருள்ள ஜீவன்கள் வளர்வதைப் போல், அந்த லிங்கம் தொடர்ந்து ஜீவனுடன் வளர்ந்துகொண்டே இருக்கிறது. உயிர்த்துடிப்புடன் திகழ்கிறது.
இன்றும் ஒவ்வொரு ஆண்டும், வட இந்தியாவின் கார்த்திக் மாதத்தில் (நவம்பர்/டிசம்பர்) இந்த லிங்கத்தின் வளர்ச்சியை அளக்கிறார்கள். எள்ளளவே இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் உயர்ந்து வருகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி ஒரு மரத்தின் வேரின் வளர்ச்சி போல கீழ்ப்புறமும் மற்றும் தண்டின் வளர்ச்சி போல மேற்புறமும் ஆக இரு பக்கங்களிலும் உள்ளது. மேற்புறம் சுவர்க்க லோகத்தையும் கீழ்ப்புறம் பாதாள லோகத்தையும் அடையும் வரை இவ்வளர்ச்சி தொடருமாம்.
மரகதமணி இன்றும் அந்த லிங்கத்தின் கீழ்ப்புறம் உள்ளதாகவும்; கீழ்ப்புறம் பாதாளலோகத்தை அடையும்போது கலியுகம் முடியும் என்பதும் பரவலான நம்பிக்கைகள் மதங்க ரிஷி தந்த மரகத மணி மூலம் இது நிகழ்ந்ததால், இந்த லிங்கம் மதங்கேஷ்வரர் என்ற திருநாமத்தைப் பெற்றுள்ளது.
சண்டேள ராஜபுதன வம்சத்து அரசர்கள் இன்றைய மத்தியபிரதேசத்தில் உள்ள கஜுராஹோவில் கிபி 885 முதல் கிபி இரு
1050 வரை அற்புதமான சிற்பக் கலைகள் நிறைந்த ஆலயங்கள் பலவற்றை எழுப்பினர். இன்று அவை உலகம் போற்றும் காட்சிப் பொருட்களாக உள்ளன. பாரம்பரிய சிற்பக்கலைகளை எடுத்துக் காட்டும் கலைப் பொக்கி ஷங்களாக விளங்குகின்றன.
மத்த போ RL நக கஜுரா பேருந்து கஜூரா 5 கி.மீ. மதங் சிற்பக் கலைகள் நிறைந்த ஆலயங்களின் அருகே வெளிப்புறம், மதங்கேஷ் வரருக்காக ஒரு கோயில் எழுப்பப் பட்டுள்ளது. இதனை நிறுவியவர், சண்டேள வம்சத்து அரசர் சந்திர தேவ் என்று சொல்லப்படுகிறது. சந்திரதேவ் சிறந்த சிவ பக்தர்.
மதங்கேஷ்வர் ஆலயத்தில் மட்டுமே பூஜைகள் நடத்தப்படுகின்றன. பக்தர்களும் வருகை தருகிறார்கள். கஜுராஹோவின் சிவசாகர் என்ற ஏரிக்கரையின் வட பாகத்தில் அமைந்துள்ளது, மதங்கேஷ்வர் மகாதேவர் ஆலயம்.
கோயில், எளிமையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கஜுராஹோவில் மற்ற இடங்களில் காணப்படும் சிற்ப வடிவங்களும் அமைப்புகளும் இதில் இல்லை. சுமார் 35 அடி நீள, அகலமுள்ள சதுர வடிவில் கர்ப்பக்கிரகம் அமைந்துள்ளது. முக்கிய நுழைவாயில் கிழக்குப்புறம் உள்ளது. பல தளங்களுடன் கூடிய கோபுரம் பிரமிட் வடிவில் காணப்படுகிறது. கல்லால் ஆன கலசம் கோபுரத்தின் மேல் வைக்கப்படுள்ளது. இரண்டு தளப் படிகள் கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள மண்டபத்திற்கு பக்தர்களை அழைத்துச் செல்கின்றன.
கர்ப்பக்கிரகத்தின் மையத்தில் சிவலிங்கமும் யோனி பீடமும் அமைந்துள்ளன. யோனி பிடத்தைச் சுற்றியே பக்தர்கள் வலம் வருகிறார்கள். இன்றைய நாளில் சிவலிங்கம் சுமார் 9 அடி உயரமும் 4 அடி சுற்று வட்டமும் கொண்டுள்ளது. அதே 9 அடிகள் பீடத்திற்குக் கீழ்ப்புறமும் இருக்கிறது. சிவலிங்கம் வெளிர் மஞ்சள் நிற மணற்கல்லால் ஆனது. பளப்பளப்பு மிகுந்தது. சிவலிங்கத்தில் பாரசீக மொழியிலும் தேவநாகரி மொழியிலும் உள்ள குறிப்புகள் ஆச்சரியத்தைத் தருகின்றன.
பிரதேசத்தின் , இந்தோர், ல்பூர் ஆகிய ங்களிலிருந்து ஹாவை அடைய வசதிகள் உள்ளன. ஹாவுக்கு சுமார் முன்பாக உள்ளது கஷ்வர் ஆலயம்.
மைய வட்டங்களின் தாங்கி அமைப்பிலான மேற்கூரையை நான்கு தூண்கள் நிற்கின்றன. ஆலயத்தின் வெளிப் புறம் கல்லினால் ஆன வினாயகரின் விக்கிரகமும் உள்புறம் பார்வதி, கார்த்திகேயனின் விக்கிரகங்களும் அலங்கரிக்கின்றன.
சிவராத்திரி, கார்த்திக் பௌர்ணமி மற்றும் சிராவண மாதம் ஆகிய காலங்களில் முக்கியத் திருவிழாக்கள் நடக்கின்றன. போலேநாத் என அழைக்கப்படும் சிவபெருமான், இந்த ஆலயம் உள்ள இடத்தில் பார்வதியை மணந்ததாக சிலர் குறிப்பிடுகின்றனர். சிவராத்திரியின்போது மூன்று நாள்கள் திருவிழாவாக இந்தத் திருமண வைபவமும் நடத்தப்படுகிறது.
கடவுளை வழிபடுபவராக இருந்தாலும் சரி, கட்டடக்கலையை ரசிப்பவராக இருந்தாலும் சரி; வரலாற்றுக் குறிப்புகளில் நாட்டம் உள்ளவராக இருந்தாலும் சரி அனைவரையும் கஜுராஹோவின் மதங்கேஷ்வர் வசீகரிப்பார் என்பது திண்ணம்!
What's Your Reaction?