மாண்புமிகு பிரதமர் யோகி ஆதித்யநாத்.. பச்சைக் குத்தி வைரலான பெண்

லக்னோவினை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிரதமர் என யோகி ஆதித்யநாத்தின் உருவத்தை கையில் பச்சைக் குத்தியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாண்புமிகு பிரதமர் யோகி ஆதித்யநாத்.. பச்சைக் குத்தி வைரலான பெண்
lucknow woman honorable prime minister yogi adityanath tattoo goes viral

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயர் ஏதோ ஒரு வகையில் இணையத்தில் பேசுப்பொருளாக இருப்பது வழக்கம். இந்த முறை யோகி ஆதித்யநாத்தின் தீவிர ரசிகை ஒருவர் தனது கைகளில் யோகி ஆதித்யநாத்தின் உருவத்தினை பிரதமர் என பச்சைக்குத்தியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். பாஜகவினர் மத்தியில் யோகி ஆதித்யநாத்திற்கு நற்பெயர் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போதும், பிரதமர் வேட்பாளர் பரிந்துரையில் யோகியின் பெயர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றார். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக முதல்வர் யோகியின் பெயர், பிரதமர் ரேஸில் அடிபடாமல் இருந்த நிலையில் பெண் ஒருவரால் மீண்டும் பேசுப்பொருளாகியுள்ளது.

லக்னோவினை சேர்ந்த இளம் பெண் ஹிமான்ஷி என்பவர் யோகி ஆதித்யநாத்தின் தீவிர ரசிகை என கூறிவருகிறார். இவர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முகத்தை தன் கையில் பச்சை குத்தியுள்ளார். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், புகைப்படத்திற்கு கீழே மாண்புமிகு பிரதமர் யோகி ஆதித்யநாத் என குறிப்பிட்டுள்ளார்.

இதுத்தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுக்குறித்து அந்த பெண் கூறுகையில், “நான் முதல்வர் யோகியின் தீவிர ரசிகை. அவரது செயல்பாடுகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளேன். அவர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு உத்தரப்பிரதேசத்தில் குற்றவாளிகள் மற்றும் மாஃபியா கும்பலுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் பாரட்டத்தக்கது. தற்போது, பெண்களுக்கு பயமில்லாத சூழ்நிலையினை உருவாக்கியுள்ளார். இரவு நேரங்களிலும் தைரியமாக பெண்கள் தற்போது பணி செய்யலாம். அவரின் மீது உள்ள உணர்வுப்பூர்வமான அன்பினை வெளிப்படுத்தும் விதமாக தான் என் கைகளில் பச்சை குத்த முடிவு செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

வீடியோ வைரலாகி வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் இளம் பெண் ஹிமான்ஷிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட் வந்த வண்ணம் உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow