துணை முதல்வராக பொறுபேற்றுள்ள உதயநிதிக்கு குவியும் பாராட்டு

துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

Sep 29, 2024 - 21:15
துணை முதல்வராக பொறுபேற்றுள்ள உதயநிதிக்கு குவியும் பாராட்டு

துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதுணையாக இருந்ததை போல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, உதயநிதி ஸ்டாலின் உறுதுணையாக இருப்பார் என நம்புவதாக குறிப்பிட்டார்.  

துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உதயநிதி மீதான வாரிசு அரசியல் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக தலைவர்களின் மகன் மகள் எம்.பியாகவோ, எம்.எல்.ஏவாகவோ இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், தேசத்திற்கு தேவையான முகத்தையும், குரலையும், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறினார்.  

மேலும் “இளையர்கள் மட்டுமல்ல, முதியவர்களும், பொதுவானவர்களும் உதயநிதியின் செயல்திறன், ஆற்றல் கண்டு வியக்கின்றனர், பொறாமைக்காரர்களைத் தவிர; 'திராவிட மாடல்' ஆட்சியின் மாட்சியை உதயநிதி வளர்ப்பார் என்பது உறுதி” என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்

துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை மேயர் பிரியா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் பேசிய அவர், விளையாட்டு துறை அமைச்சராக  வியந்து பார்க்கும் அளவிற்கு பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ள உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக தமிழ்நாடு சிறந்து விளங்கும் வகையில் செயல்படுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow