வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி..எப்போது உருவாகிறது தெரியுமா?
வங்கக்கடலில் நவம்பர் முதல் வார இறுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நவம்பர் முதல் வார இறுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு ஆந்திர வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், இரண்டாவது வாரத்தில் அது தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நவம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?