அம்பானி கைலாசத்தையும், வைகுண்டத்தையும் பூமிக்கு கொண்டு வந்துட்டாரு... ரஜினிகாந்த் புகழாரம்..! 

Mar 4, 2024 - 15:39
Mar 4, 2024 - 16:30
அம்பானி கைலாசத்தையும், வைகுண்டத்தையும் பூமிக்கு கொண்டு வந்துட்டாரு... ரஜினிகாந்த் புகழாரம்..! 


"உலகையே பிரமிக்க வைக்கும் வகையில் குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்று வரும் அம்பானி வீட்டு தி்ருமண கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு தெரிவித்த கருத்து அனைவரையும் கவர்ந்துள்ளது"


குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரில் சுமார்  ரூ.1000 கோடி செலவில்  அம்பானி - நீட்டா அம்பானி மகன் திருமண விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இது திருமணத்திற்கு முன் நடக்கும் ப்ரீ- வெட்டிங் நிகழ்வு என்று அம்பானி குடும்பத்தினர் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் முதல் உலக பிரபலங்கள் வரை அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க். பாடகி ரிகானா உள்ளிட்ட பிரபலங்களும் இந்தியாவுக்கு வந்து விழாவை சிறப்பித்தனர்.   இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பானி - நீட்டா திருமண நிகழ்ச்சியை வடிவமைத்துள்ள விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது எனக்கூறினார். அத்துடன், அவர்கள் கைலாசத்தையும், வைகுண்டத்தையும் பூமிக்கு கொண்டு வந்துவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், மணமக்களான ஆனந்த் அம்பானி - ராதிகாவுக்கு வாழ்த்துகளையும் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow