விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி… வீடியோ வெளியிட்ட சோனம் வாங்சுக்!

உண்ணாவிரதத்தை முடித்த பின்னர், தன்னைப் பற்றியும் தனது போராட்டம் குறித்தும் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சோனம் வாங்சுக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Jul 25, 2026 - 12:47
விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி… வீடியோ வெளியிட்ட சோனம் வாங்சுக்!

இதுதொடர்பாக வாங்சுக் வெளியிட்டுள்ள வீடியோவில், மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் 11 கிலோ உடல் எடையை இழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த இரண்டு வாரங்களில் தான் கூறிய சில கருத்துகள் மற்றும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பலருக்கும் முழுமையாக தெரியாமல் இருக்கலாம். தனது போராட்டத்திற்காக யாரிடமும் நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். 

மாணவர்களுக்காக மேற்கொண்ட உண்ணாவிரதம் மற்றும் அவர்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவற்றுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 

மாணவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 11 கிலோ எடையை இழந்ததாகக் கூறியுள்ள சோனம் வாங்சுக், விமர்சனங்களுக்கு அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow