சுள்ளுன்னு அடிக்கிற வெயில்.. உடல் சூடாகாமல் தப்பிக்க ஜில்லுன்னு டிப்ஸ்

May 7, 2024 - 12:55
சுள்ளுன்னு அடிக்கிற வெயில்.. உடல் சூடாகாமல் தப்பிக்க ஜில்லுன்னு டிப்ஸ்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலை கண்டு மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்ளலாம் என்பதை தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

வெயில் காலத்தில் இருமுறை குளிப்பதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். அப்போது தான் வெப்பத்திலிருந்து கொஞ்சமாவது விடுபட்டு புத்துணர்ச்சி பெற முடியும். மேலும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கவேண்டும். நீர் சத்துக்கள் அதிகமுள்ள பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும். 

முதியவர்கள்,குழந்தைகள்,கர்ப்பிணிகள் போன்றோர் காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3.30 வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் இவ்வாறு செய்தால் வெப்ப மயக்கம் ஏற்படாமல் தப்பிக்கலாம். 

நம் உடல் உஷ்ணத்தை குறைக்கும் வகையில் நீர் சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் பழங்கள், பழரசங்களை அதிகளவு எடுத்து கொள்ள வேண்டும். காலையில் ராகி கூழ்,கம்பங்கூழ்,பழைய சாதம் போன்றவை எடுத்து கொள்ளலாம். 11மணிக்கு டீ.காபி பருகுவதை தவிர்த்துவிட்டு தர்பூசணி ஜூஸ், இளநீர்,ஆரஞ்சு ஜூஸ் போன்ற ஜூஸ்  வகைகளை அதிகளவு எடுத்து கொள்ளலாம் .

உணவுகள்: கோடை சீசனில் அதிகம் கிடைக்கும் நுங்கு,முலாம் பழம், இளநீர்  போன்றவைகளையும் குடிப்பதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். அவசிய தேவைக்க வெளியில் செல்பவர்கள், அலுவலகத்திற்கு செல்வோர் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க லோசன்களை தடவிக்கொள்ளலாம். 

கையோடு குடை,வாட்டர்பாட்டிலில் தண்ணீர்,மோர்,பழ துண்டுகள் போன்றவற்றை எடுத்து செல்லலாம். கட்டாயம் குடை கொண்டு போக வேண்டும்,அந்த குடை கருமை நிறத்தில் இல்லாமல் வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும் அப்பொழுது தான் வெயில் படாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும்.

கார உணவுளை தவிர்க்கவும்: வெயிலின் போது காரசாரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.ஏனென்றால் ஏற்கனவே சூட்டில் உள்ள நம்மை காரமான உணவுகள் மீண்டும் உடலின் உஷ்ணத்தை அதிகரித்து அவஸ்தையை உண்டு பண்ணும். எனவே முடிந்த அளவிற்கு எளிமையான உணவுகளை எடுத்துகொள்ளலாம். குறைந்த அளவிலான உணவுகளை எடுத்து கொண்டு வெள்ளரி  மற்றும் எலுமிச்சை சாறு போன்ற நீர் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.

உடைகள்: ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கிணங்க இந்த வெயிலில் சற்று தளர்வான ஆடைளை அணிய வேண்டும்.  கருமை நிற ஆடைகளை தவிர்த்துவிட்டு வெளிர் நிற ஆடைகளை கோடை காலத்தில் அணிய வேண்டும். அப்பொழுது தான் உடலில் வெப்பம் அதிகம் பாதிக்காது.  சரியான உணவு, உடைகளை அணிந்தாலே இந்த கோடையை சுலபமாக சமாளிக்கலாம். ஃபாலோ பண்ணுங்க.. சூடான கோடையை ஜில்லுன்னு கடந்து விடலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow