தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கடகம் ராசிக்காரர்களே.. கவனமாக இருக்க வேண்டிய நேரம்

கடகம் ராசியினருக்கான தமிழ்ப்புத்தாண்டு பலன், பரிகாரங்களை துல்லியமாக கணித்து குமுதம் வாசகர்களுக்காக வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

Apr 12, 2025 - 11:52
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கடகம் ராசிக்காரர்களே.. கவனமாக இருக்க வேண்டிய நேரம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கடகம் ராசி

மங்களகரமான தமிழ்ப்புத்தாண்டான விஸ்வாவசு வருடம் ஜோதிடக் கணக்குகளின்படி 13.4.2025 அன்று நள்ளிரவு 2.58 மணிக்குப் பிறக்கிறது. அதேசமயம் 14.4.2025 அன்றே தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. கடகம் ராசியினருக்கான தமிழ் புத்தாண்டு பலன் விவரங்கள் பின்வருமாறு-

கடகம்: உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வரக்கூடிய ஆண்டு. அலுவலகத்தில் பதவி, ஊதிய உயர்வுகளில் இருந்த தடை நீங்கும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பும் அதனால் ஆதாயமும் பெருகும். அதேசமயம் வீண் சலிப்பு, புலம்பல் தவிர்ப்பதும், யாரையும் உதாசீனப்படுத்தாமல் இருப்பதும் நல்லது.

வீட்டில் விசேஷங்கள் அடுத்தடுத்து வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு பெரிய மனிதர்கள் நட்பும் அதனால் ஆதாயமும் கிட்டும். வீடு, மனை, வாகனம் வாங்கும் முயற்சிகள் பலிக்கும். பிறமொழி மனிதர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள்.

செய்யும் தொழிலில் முதலீடுகளில் மூன்றாம் நபர் தலையீட்டினைத் தவிருங்கள். வர்த்தகக் கடன்களை திரும்பச் செலுத்துவதில் அலட்சியம் கூடாது. அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு நிதானம் முக்கியம் . கோப்புகளைக் கையாள்வோரும், பணத்தை நிர்வகிப்போரும் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். மாணவர்கள் வீண் கேளிக்கைகளில் ஈடுபடுதல் வேண்டாம். கலை, படைப்புத் துறையினர் பொறுமையால் பெருமை பெறலாம்.

வாகனப் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்யுங்கள். அடிவயிறு, பாதம், உணவுக்குழாய், பாதம், மூட்டு, முதுகு வலி உபத்திரவம் தரலாம். திருவண்ணாமலை ஈசனை தினமும் மனதார வணங்குங்கள். வாழ்க்கை தித்திக்கும்.

Read more:  தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுனம் ராசிக்காரர்களே..டென்ஷன் மட்டும் வேண்டாம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow