ஆதார் சரிபார்ப்பு: ஸ்கேன் செய்தால் போதுமா? வருகிறது புதிய மொபைல் ஆப்!
ஆதார் சரிப்பார்பு மேற்கொள்ள அதிநவீன வசதிகளை உள்ளடக்கி பிரத்யேக மொபைல் ஆப் ஒன்றினை மத்திய அரசு வடிவமைத்துள்ளதாகவும், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் எனவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஆதார் அட்டை, இந்தியாவிலுள்ள தனிநபர்களுக்கான அடையாள ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நாம் பயணிக்கும் போது, ஹோட்டல்களில் தங்குவதற்கு அறை எடுக்கும் போது, புதிய மொபைல் எண் பெற என அனைத்து விதமான சேவை இடங்களிலும் நம்மிடம் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணினை கேட்கிறார்கள்.
இதற்காக நாம் ஆதார் அட்டையினை எப்போதும் உடன் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. சில இடங்களில் ஆதார் அட்டையினை நகல் எடுத்து தர வேண்டிய சூழ்நிலையும் நிலவுகிறது. இதன் மூலம் தனிநபர்களின் தகவல்கள் எளிதில் பரவுகிறது.
வருகிறது புதிய மொபைல் ஆப்:
ஆதார் ஆவணத்தினால் தனிநபர் தகவல்களின் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குள்ளாகிறது என தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழும்பிவரும் நிலையில் இதற்கு தீர்வாக புதிய மொபைல் ஆப் ஒன்றினை மத்திய அரசு வடிவமைத்துள்ளது.
இதுத்தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிவு ஒன்றினை இட்டுள்ளார். அதில், “முக அடையாள அங்கீகாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை உள்ளடக்கி இந்திய குடிமக்களுக்கு டிஜிட்டல் ஆதார் சேவையை வழங்க புதிய ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.”
"தற்போது UPI ஆப் மூலம் QR கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்துவது போல, இனி ஆதார் சரிபார்பினை எளிதாக மேற்கொள்ளலாம். இதனால், தற்போது உள்ளது போல் நீங்கள் ஆதார் அட்டையினை நகல் எடுத்து தரவேண்டிய அவசியம் இல்லை” எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், தற்போது பீட்டா செயல்பாட்டிலுள்ள இந்த ஆப், விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
செயலி எப்படி செயல்படும்?
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு ஹோட்டலில் செக்-இன் செய்ய செல்கிறீர்கள் என்றால்,
உங்கள் முன் ஒரு QR கோடு இருக்கும். அதை ஸ்கேன் செய்தால் நீங்கள் ஆதாரில் எந்த தகவலை பகிர விரும்புகிறீர்கள் என கேட்கும். அதற்கு ”approve" கொடுக்கும் பட்சத்தில் முக அடையாள அங்கீகாரம் சாளரம் (face recognition window) திறக்கும். உங்கள் முகத்தை ஸ்கேன் செய்தால் போதும், ஆதார் எண் சரிபார்க்கப்பட்டதாக தகவல் வந்துவிடும்.
இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் ஆதார் மூலம் தனிநபரின் தரவுகளை தவறாக பயன்படுத்துவது முற்றிலும் குறையும் என மத்திய அரசு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
https://www.simplycertify.com/
New Aadhaar App
Face ID authentication via mobile app
❌ No physical card
❌ No photocopies
What's Your Reaction?






