ரூ.18000 மதிப்பிலான செல்போன் திருட்டு... CCTV-யில் சிக்கிய சிட்டுகள்...
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையில் டெம்பர் கிளாஸ் ஒட்ட வந்து இளைஞர்கள் ரூ.18000 மதிப்பிலான செல்போனை திருடிச் சென்றனர்.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையில் டெம்பர் கிளாஸ் ஒட்ட வந்து இளைஞர்கள் ரூ.18000 மதிப்பிலான செல்போனை திருடிச் சென்றனர்.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் அப்சல் என்பவர் மொபைல் வேர்ல்ட் என்ற பெயரில் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு இன்று மதியம் (மார்ச் 13) வந்த இரண்டு இளைஞர்கள், தங்களது செல்போனுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்ட வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து கடையில் இருந்த ஊழியர் டெம்பர் கிளாஸ் ஒட்டிக் கொண்டிருந்த போது, டேபிள் மேல் இருந்த ரூ.18,000 மதிப்பிலான செல்போனை எடுத்து பார்ப்பது போல் நடித்துள்ளனர்.
கடை ஊழியர்கள் கவனிக்கவில்லை என தெரிந்த இளைஞர், அந்த செல்போனை டிராயர் பாக்கெட்டில் மறைத்து வைத்துக் கொண்டு, செல்போனுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்டியதற்கு பணத்தைக் கொடுத்து விட்டு வேகமாக அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து செல்போன்களை சரிபார்த்த போது குறிப்பிட்ட செல்போன் இல்லாததைக் கண்டு கடை ஊழியர் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, டெம்பர் கிளாஸ் ஒட்ட வந்த இளைஞர்கள் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?