சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை
திருவாரூர் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 31 வயதான இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. 31 வயதான இவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதனையடுத்து அச்சிறூமியில் பெற்றோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குருமூர்த்தி மீது திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரினை அடுத்து கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி குருமூர்த்தியை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு குற்ற அறிக்கை திருவாரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று குருமூர்த்திக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் 7000 ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பினை அடுத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டம்தான் போக்சோ. அச்சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட அனைவருமே குழந்தைகள்தான். இப்படியிருக்கையில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணிடம் காதலைத் தெரிவிப்பது கூட குற்றமாகக் கருதப்படுகிறது. இந்நிலையி பாலியல் ரீதியாக அவர்களைச் சீண்டுவது மிகப்பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. ஆகவேதான் குருமூர்த்திக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
What's Your Reaction?