சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து..தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம்

May 6, 2024 - 20:24
சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து..தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம்

சிவகாசி அருகே இருவேறு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளால் தொழிலாளர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் சின்னக்கருப்பு என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. தகர செட் அமைத்து செயல்பட்டு வரும் இந்த ஆலையில் தொழிலாளர்கள் இன்று (06-05-2024) வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது மருந்துகளை அரைக்கும் போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக பயங்கர சத்தத்துடன் கூடிய வெடி விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோல் சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் பகுதியில் ஐயன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை சேதம் அடைந்தது. விபத்து ஏற்பட்டதும் தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து ஏற்படும் விபத்துகளால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow