திருட்டுத்தனமாக திரைப்படங்களை பதிவிட்ட 800 சோசியல் மீடியாக்கள், 3,142 டெலிகிராம் சேனல்கள் முடக்கம் 

புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவிட்ட  3,142 டெலிகிராம் சேனல்கள், 800 சோசியல் மீடியாக்களை முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திருட்டுத்தனமாக திரைப்படங்களை பதிவிட்ட 800 சோசியல் மீடியாக்கள், 3,142 டெலிகிராம் சேனல்கள் முடக்கம் 
திருட்டுத்தனமாக திரைப்படங்களை பதிவிட்டதால் நடவடிக்கை

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் புதன்கிழமை அளித்த பதிலில் கூறியதாவது: திரைப்படங்கள் திருட்டுத்தனமாகப் படம் பிடிக்கப்படுவதைத் தடுப்பதற்கான சட்ட வழிமுறைகள், ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் 2023-இன் 6ஏஏ, 6ஏபி ஆகிய பிரிவுகளின் கீழ் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பிரிவுகள் திரைப்படங்களை அனுமதியின்றி படம் பிடித்து பகிரப்படுவதைத் தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்தப் பிரிவுகளை யாராவது மீறினால், அவருக்கு அந்தச் சட்டத்தின் 7(1ஏ) பிரிவின் கீழ், குறைந்தபட்சம் 3 மாதங்கள் சிறைத் தண்டனையுடன் ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இந்தச் சிறைத் தண்டனையை 3 ஆண்டுகள் வரை நீட்டித்து, திரைப்பட தயாரிப்பின் மொத்த செலவில் 5 சதவீதத்தை அபராதமாக விதிக்க முடியும்.

இந்நிலையில், ஓடிடி தளங்கள், தயாரிப்பாளா்கள் உள்ளிட்டோருக்குச் சொந்தமான அல்லது உரிமம் பெற்ற பொருளடக்கங்களை, அவா்களின் அனுமதியின்றி பதிப்புரிமை சட்டம் 1957-ஐ மீறி வெளியிட்ட 3,142 சேனல்களை முடக்குமாறு தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79(3)(பி)-இன் கீழ் டெலிகிராம் நிறுவனத்துக்கு கடந்த மாா்ச் 11-ஆம் தேதி தெரியப்படுத்தப்பட்டது. இதே காரணத்துக்காக சுமாா் 800 வலைதளங்கள் இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் முடக்கப்பட்டன.இவ்வாறு அவர் தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow