காஞ்சிபுரத்தில் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடும் என்றே பொது மக்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றாமே மிஞ்சியது.

Jan 8, 2024 - 14:30
காஞ்சிபுரத்தில் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஞ்சிபுரத்தில் காலை முதலே பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், செங்கல்பட்டு  மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் காஞ்சிபுரத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்றே தெரிவித்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிக்கப்படவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செவிலிமேடு, ஓரிக்கை, பெரியார் நகர், காந்தி ரோடு, பேருந்து நிலையம், பூக்கடைச்சத்திரம், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படாததால் மழையால் பள்ளி மாணவ, மாணவிகள் சிலர் குடையுடனும் ரெயின்கோர்ட் உடன் வந்தாலும் கூட, அவர்களை அழைத்து வரும் பெற்றோர் பெருத்த சிரமத்திற்கு இடையே பள்ளிக்கு அழைத்து வந்தனர்.கொட்டும் மழையிலும் பள்ளிக்கு நனைந்தபடியே செல்லும் நிலையால் பள்ளி மாணவ, மாணவிகள் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.

காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடும் என்றே பொது மக்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றாமே மிஞ்சியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow