நெல்லை: பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் பெற பல காத்திருந்த மக்கள் ஏமாற்றம்

யார் யாருக்கெல்லாம் பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப டோக்கன் வழங்கப்பட இருக்கிறது

Jan 8, 2024 - 14:32
நெல்லை: பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் பெற பல காத்திருந்த மக்கள் ஏமாற்றம்

நெல்லை மாநகர நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு டோக்கன் பெறுவதற்காக பல மணி நேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருவிழா வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகை என்றாலே பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் பொங்கலிட்டு கடவுளை வழி விடுவது வழக்கம். எனவே தமிழக அரசு சார்பில் கடந்த பல ஆண்டுகளாக அரிசி, வெள்ளம், கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பச்சரிசி, முழு கரும்பு ஆகிய பொருட்கள அடங்கிய பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மேலும் இதற்கான டோக்கன் நேற்று முதல் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோ,ர் சர்க்கரை அட்டைதாரர்கள் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது.

 இந்த நிலையில் அரசின் அறிவிப்பை தொடர்ந்து நெல்லை மாநகரப் பகுதியில் நேற்று பொதுமக்கள் காலை முதல் நியாய விலை கடைகளில் டோக்கன் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தனர். அதேசமயம் காலை 11 மணி ஆன பிறகும் டோக்கன் வழங்கப்படவில்லை. கடை ஊழியர்களும் மிகத் தாமதமாகவே கடைக்கு வந்தனர். இறுதியாக நேற்று டோக்கன் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவித்ததும், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 இது குறித்து ஊழியர்களிடம் விசாரித்தபோது, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சர்க்கரை அட்டைத்தாரர்கள் உள்ளிட்டோருக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என அரசு தெரிவித்துள்ளது. எனவே யார் யாருக்கெல்லாம் பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப டோக்கன் வழங்கப்பட இருக்கிறது. அந்த பணிகள் நிறைவு பெறாததால் டோக்கன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். அதே சமயம் இதுகுறித்த முன்னறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow