உல்லாச வாழ்க்கைக்காக தொடர் வழிப்பறி... போலீஸிடம் வசமாக சிக்கிய கொள்ளையன்...

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ரகுமான் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

Feb 26, 2024 - 08:49
உல்லாச வாழ்க்கைக்காக தொடர் வழிப்பறி... போலீஸிடம் வசமாக சிக்கிய கொள்ளையன்...

சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் போலீஸிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது தவறு விழுந்து கை எலும்பு முறிந்தது.

மதுரவாயல், கோயம்பேடு, விருகம்பாக்கம், அரும்பாக்கம், நொளம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் மதுரவாயல், கோயம்பேடு உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கொள்ளையனைக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மேலும், சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த குற்றங்களில் ஈடுபட்டது ரகுமான் என்ற கொள்ளையன் என்பது போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த ரகுமானை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உல்லாச வாழ்க்கைக்காக பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும் தன்னுடன் கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டால் போலீசிடம் சிக்கிக் கொள்வோம் என்பதற்காகக் கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்ளாமல் தனியாக வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டது மதுரவாயல், கோயம்பேடு பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow