மகன் திருமணத்திற்காக 14 கோயில்களை கட்டும் அம்பானி குடும்பம்! 

கோயில்களின் வளாகத்தை பழங்கால மரபுகளை பின்பற்றி கட்டி வருகின்றனர்.

Feb 26, 2024 - 08:38
மகன் திருமணத்திற்காக 14 கோயில்களை கட்டும் அம்பானி குடும்பம்! 

அம்பானியின் மகன் திருமணத்தை முன்னிட்டு குஜராத்தின் ஜாம்நகரில் 14 கோயில்களை கட்டும் பணியில் அம்பானி குடும்பம் இறங்கியுள்ளது. 

இந்தியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி, நீத்தா அம்பானியுடன் இணைந்து ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை வழி நடத்தி வருகிறார். இவருக்கும், பிரபல தொழிலதிபரான வீரேன் மெர்ச்செண்டின் மகள் ராதிகா மெர்ச்செண்ட்டுக்கும் கடந்த 2023-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் நாத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் வைத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் வரும் ஜூன் மாதம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. 

திருமணத்திற்கு முன்பு உலக பணக்காரர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், முக்கிய பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ள ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்யும் அம்பானி குடும்பம், மகனின் திருமணத்தை முன்னிட்டு குஜராத்தின் ஜாம்நகரில் 14 கோயில்களை கட்டும் பணியில் இறங்கியுள்ளது. 

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள வளாகத்தில் தான் இந்த 14 கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நுணுக்கமாக செதுக்கப்பட்ட தூண்கள், ஃப்ரெஸ்கோ பாணி ஓவியங்கள், பல்வேறு தெய்வங்களின் சிற்பங்கள், கட்டிடக்கலை ஆகியவை வடிவமைக்கப்பட்டு வருகின்றன.  

அதோடு, இந்தியாவின் கலாசாரம் மற்றும் ஆன்மீக அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் பழமைவாய்ந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த கோயில்களின் வளாகத்தை பழங்கால மரபுகளை பின்பற்றி கட்டி வருகின்றனர்.திருமண ஏற்பாடுகளுக்கு மத்தியில், ஜாம்நகரில் கட்டப்பட்டுவரும் கோயில்கள் பணிகளை நீத்தா அம்பானி தான் மேற்பார்வையிட்டு வருகின்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow