தீபக் சஹாரை ஏமாற்றிய ZOMATO.. என்ன நடந்தது?
பணத்தைத் திருப்பித் தருவது பிரச்னையைத் தீர்க்காது. பசியை பணத்தால் ஈடுசெய்ய முடியாது" என்று சஹார் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சஹார், உணவு விநியோக தளமான Zomato தன்னை ஏமாற்றியதாகக் கூறியுள்ள சம்பவம் சோஷியல் மீடியா பயனர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் தனது X வலைத்தளப் பக்கத்தில் Zomato-வை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “இந்தியாவில் புதியவகை மோசடி. @zomato-லிருந்து உணவு ஆர்டர் செய்தேன், செயலியில் டெலிவரி செய்யப்பட்டது என காண்பிக்கிறது, ஆனால் எதையும் நான் பெறவில்லை. இதுகுறித்து புகாரளிக்க வாடிக்கையாளர் சேவையை தொடர்புக் கொண்டபோது உணவு டெலிவரி செய்யப்பட்டுவிட்டதாகவும், நான் தான் பொய் சொல்வதாகவும் கூறினார்கள். நிச்சயமாக, பலர் இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். @zomato- வை குறிப்பிட்டு உங்கள் கதையைச் சொல்லுங்கள்" என்று தீபக் சஹார் தெரிவித்திருந்தார்.
தீபக் சாஹரின் இந்த பதிவிற்கு உடனடியாக பதிலளித்த சோமெட்டோ நிறுவனம், சிரமத்திற்காக தீபக் சஹாரிடம் மன்னிப்பு கேட்டது. அதில், “ஹாய் தீபக், உங்களின் அனுபவத்தைப் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இதுபோன்ற பிரச்னைகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என்று உறுதியளிக்கிறோம். தற்போதைய விவகாரத்தில் விரைவான தீர்வை உறுதிசெய்ய இந்த விஷயத்தை அவசரமாக கவனித்து வருகிறோம்" என்று Zomato தெரிவித்துள்ளது.
என்னத்தான் சோமெட்டோ மன்னிப்பு கேட்டு பதிவிட்டிருந்தாலும், அதன்மீது கடும் கோபத்தில் இருந்த தீபக் சஹார், நிறைய பேர் இதே போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வதால் பணத்தைத் திருப்பித் தருவது பிரச்சனையைத் தீர்க்காது என்று கூறினார்.
மேலும், "நிறைய பேர் இந்த சிக்கலை எதிர்கொள்வதால் இதை முன்னிலைப்படுத்த விரும்பினேன்.பணத்தைத் திருப்பித் தருவது பிரச்னையைத் தீர்க்காது. பசியை பணத்தால் ஈடுசெய்ய முடியாது" என்று சஹார் கூறினார்.
தீபக் சஹாரின் பதிவு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து, தாங்கள் டெலிவரியின்போது ஏமாற்றப்பட்ட பிரச்னைகள் குறித்து மக்கள் Zomato உடன் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
What's Your Reaction?