திமுக கூட்டணி.. யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

Mar 9, 2024 - 21:21
திமுக கூட்டணி.. யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் இழுப்பறி நீடித்து வந்த நிலையில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது திமுக.  

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்டங்களாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக நடத்தி வந்தது. முதல் கட்சிகளாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்பிறகு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளை ஒதுக்கிய திமுக, விசிக மற்றும் மதிமுகவுடன் இழுப்பறியை நீட்டித்தது. அதற்கு உதயசூரியன் சின்னம் இல்லாமல் தங்கள் சொந்த சின்னத்திலேயே போட்டியிடும்வோம் என்று மதிமுக மற்றும் விசிக கறார் காட்டியதே காரணம் என்றார்கள். ஒருவழியாக சொந்த சின்னத்தில் போட்டியிட திமுக ஒப்புக் கொண்ட நிலையில், விசிகவிற்கு இரண்டு தொகுதிகளையும் மதிமுகவிற்கு ஒரு தொகுதியையும் ஒதுக்கீடு செய்தது. 

இந்த நிலையில், இன்று (மார்ச் 9) காங்கிரஸ் மற்றும் மநீம உடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது திமுக. மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபா சீட்டும், காங்கிரஸிற்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் + புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை சுமுகமாக முடித்துள்ள திமுக, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 21 இடங்களில் போட்டியிட உள்ளது. 

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு:

திமுக – 21
காங்கிரஸ் – 9 +1
விசிக – 2
இந்திய கம்யூனிஸ்ட் – 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2
மதிமுக – 1
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 1

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow