அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. கருத்து கூறிய அமெரிக்கா... கண்டனத்தை பதிவு செய்த இந்தியா
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமெரிக்கா ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த நிலையில அந்த நாட்டு தூதரக அதிகாரிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு அமல்படுத்தியது. இதுக்கு முன்னாடி பழைய மதுபான கொள்கையின் படி, 750 மில்லி லிட்டர் கொண்ட ஒரு பாட்டிலின் மொத்த வியாபாரியின் விற்பனை விலை 166 ரூபாய் 73 காசாகவும், கலால் வரி எனப்படும் எக்சைஸ் ட்யூட்டி 223 ரூபாய் 88 காசாகவும், மதிப்பு கூட்டு வரி 106 ரூபாயாகவும், சில்லறை விற்பனை கமிஷன் 33 ரூபாய் 39 காசாகவும் என மொத்தமாக கஸ்டமருக்கு 530 ரூபாயக்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையின்டி, 750 மில்லி லிட்டர் கொண்ட ஒரு பாட்டிலின் மொத்த வியாபாரியின் விற்பனை விலை 188 ரூபாய் 41 காசாகவும், கலால் வரி எனப்படும் எக்சைஸ் ட்யூட்டி ஒரூ ரூபாய் 88 காசாகவும், மதிப்பு கூட்டு வரி ஒரு ரூபாய் 90 காசாகவும், சில்லறை விற்பனை கமிஷன் 363 ரூபாய் 27 காசாகவும் என மொத்தமாக கஸ்டமருக்கு 560 ரூபாயக்கு விற்கப்பட்டது.
இந்த புதிய மதுபான கொள்கைனால அரசுக்கு வெறும் 8 ரூபாய் 32 காசு மட்டுதான் வருமானமாகவும், 321 ரூபாய் 56 காசு வருமான இழப்பும் ஏற்பட்டிருக்கு. அதுமட்டுமில்லாம, பழைய மதுபான கொள்கையினால சில்லறை விற்பனையாளரின் கமிஷன் வெறும் 33 ரூபாய் 39 காசா இருந்த நிலையில் இந்த புதிய கொள்கைனால 363 ரூபாய் 27 காசு கமிஷனாக போயுள்ளது.
இதனாலதான் ஊழல் நடந்ததாகவும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாகவும் டெல்லி அரசு மேல பாஜக குற்றச்சாட்ட முன்வைச்சு வழக்கு தொடர்ந்தது. இந்த புகாரின் அடிப்படையில்தான் சிபிஐ, அமலாக்கத்துறை தனிதனியா வழக்குப்பதிவு பண்ணி டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா என கடைசியா கடந்த 22ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பான நடவடிக்கைய அமெரிக்கா அரசு கவனித்து வருவதாகவும், இந்த வழக்குல நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்படுவதையும், சிறையில் இருக்கும் டெல்லி முதலமைச்சருக்கு சரியான நேரத்தில சட்ட உதவி கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் இமெயில் மூலம் கருத்து கூறியிருந்தார்.
அமெரிக்காவோட இந்த கருத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. "இந்தியாவோட சட்ட நடவடிக்கைகள், சுதந்திரமான நீதித்துறையைச் சார்ந்தது. அது சரியான நேரத்துல முடிவெடுக்கும். அதன்மீது கருத்து தெரிவிப்பது தேவையற்றது" என மத்திய அரசு தன்னோட கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
அதையும் தாண்டி இந்தியாவில் இருக்குற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு அந்த நாட்டோட தூதரக அதிகாரியான குளோரியா பெர்பெனாவை நேரில் அழைத்து மத்திய அரசு, சுமார் 40 நிமிடத்திற்கு மேலாக பேசி கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
What's Your Reaction?