இன்று மாலையுடன் ஓய்கிறது 3ஆம் கட்ட தேர்தல் பிரசாரம்.. இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம்....

குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள 3ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

May 5, 2024 - 10:52
இன்று மாலையுடன் ஓய்கிறது 3ஆம் கட்ட தேர்தல் பிரசாரம்.. இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம்....

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. 

இந்நிலையில், 3ஆம் கட்டமாக 94 தொகுதிகளுக்கான தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், குஜராத் - 26, கர்நாடகா - 14, மகாராஷ்டிரா - 11, கோவா - 2, அஸ்ஸாம் - 3, பீகார் - 5, சத்தீஸ்கர் - 7, மத்தியப்பிரதேசம் - 8, உத்தரப்பிரதேசம் - 10, மேற்குவங்கம் - 4 உள்ளிட்ட 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதேபோல், ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட அனந்த்நாக் - ரஜோரி - 1, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

3ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் 3ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம், இன்று (05.05.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் இறுதிக் கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகளின்  தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow