வாகனம் மோதி இறந்த கன்று - செய்வதறியாது தவித்த தாய்ப்பசு
சாலைகளில் விட வேண்டாம்.இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
வாகனத்தில் அடிபட்டு இறந்த கன்று குட்டி செய்வதறியாது தவித்த தாய்பசு, பார்ப்போரின் கண்களை கலங்கடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர் என்ற வேறுபாடு இல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் கால்நடை வளர்ப்பவர்கள் சாலைகளில் விட்டு விடுகிறார்கள். கால்நடைகளின் மீது மோதி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில் திருவாரூரை அடுத்த பௌத்திரமாணிக்கம் என்ற இடத்தில் சாலையை கடக்க பசுவும், கன்றுக்குட்டியும் முற்பட்டபோது வாகனத்தில் அடிபட்டு கன்று குட்டி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது.
கன்று குட்டி உயிரிழந்தது தெரியாமல் தாய் பசுவானது தனது கன்று குட்டி தூங்குவதாக நினைத்து கன்று குட்டியை எழுப்ப முற்பட்டது.இந்த நிகழ்வு வழியாக சென்றவர்களை சோகத்தினால் ஆழ்த்தியது.
அதனை அவ்வழியாக சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கால்நடை உரிமையாளர்கள் தயவுசெய்து கால்நடைகளை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும். சாலைகளில் விட வேண்டாம்.இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி அவரது கருத்தையும் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்நடைகளை சாலைகளில் விடும் உரிமையாளரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?