இனி ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு; புதிய அணுகுமுறை மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்குமா?
2025 - 2026-ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருக்கிறார்.
சத்தீஸ்கரில் PM SHRI (பிரதம மந்திரி பள்ளிகள் ரைசிங் இந்தியா) திட்டத்தை தொடங்கி வைத்தஅ வர், பொதுத் தேர்வுகளுக்கான புதிய வடிவத்தை வெளியிட்டார். அப்போது அமைச்சர் கூறியதாவது, "கடந்த ஆண்டு கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் (NEP 2020) கீழ் புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் (NCF) பரிந்துரைகளுக்கு இணங்க, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த முடிவு செய்யப்பட்டது. தேசிய கல்விக்கொள்கை மூலம் (NEP) மூலம் மாணவர்களை மன அழுத்தமில்லாமல் வைத்திருப்பது, தரமான கல்வியை வளப்படுத்துவது, மாணவர்களை கலாச்சாரத்துடன் இணைப்பது மற்றும் அவர்களை தயார்படுத்துவதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியம். 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக வளர்ப்பதற்கான திட்டம் இது.
கல்வி தொடர்பாக மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், ஒரு புதிய திட்டத்தை கல்வி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களது படிப்பை தவிர்த்து மற்ற நேரங்களில் கவனம் செலுத்துவதற்கு போதுமான நேரம் இருப்பதையும், அவர்களின் நீண்ட கால இலக்குகளை கருத்தில் கொள்வதற்கான வாய்ப்பையும் இது உறுதி செய்யும். ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண்ணைப் பெற முடியும், இது அவர்களின் தொழில் வாய்ப்புகளைத் தீர்மானிக்கும்" என கூறினார்.
What's Your Reaction?