வெப்ப அலை.. மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்.. தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்.. உஷார் மக்களே!

கோடை வெயில் சுட்டெரித்து வரக்கூடிய நிலையில் தமிழ்நாட்டில் இன்றைய தினம் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Apr 24, 2024 - 11:59
வெப்ப அலை.. மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்.. தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்.. உஷார் மக்களே!


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோடு நகரில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. 

இதனிடையே இன்றும், நாளையும் மிகக் கடுமையான அளவில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மேற்குவங்க மாநிலத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் தமிழ்நாட்டில் இன்றைய தினம் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அதேபோல் உள் கர்நாடகா, தெலுங்கானா, ராயலசீமா, உத்திர பிரதேசம், கடலோர ஆந்திரா மற்றும்  மேற்கு வங்கம், சிக்கிம், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் கடலோர ஒடிசாவின் ஒரு சில பகுதிகளில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிகக் கடுமையான வெப்ப அலை வீச கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

இன்றும் நாளையும் மிகக் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மேற்குவங்க மாநிலத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், ஒடிசாவிற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலை வீசக்கூடிய நேரமான காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரைக்கும் வயதானவர்கள், நோயாளிகள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனிடையே கரூரில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், 

குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow