சட்டுன்னு குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.54,320க்கு விற்பனை.. இப்போது தங்கம் வாங்கலாமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.54,320க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.89.50க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே. கடந்த மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை எட்டியது. படிப்படியாக உயர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய உச்சமாக 54,440 ரூபாயாக உயர்ந்தது.
வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தால் அதற்கு வட்டி விகிதம் குறைவாக உள்ளது. பாதுகாப்பான முதலீடு என்பதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருந்தது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக குறைந்து வருகிறது. முதலீட்டாளர்கள் பலரும் லாபத்தைப் பார்க்க அதிகளவிலான தங்கத்தை விற்பனை செய்ய துவங்கியதால் இந்திய சந்தையில் சனிக்கிழமையன்று ரீடைல் சந்தையில் 22 கேரட் தங்கம் விலை குறையத் தொடங்கியது.
இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ 65 குறைந்து சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,790 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.54,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,790க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.89.50க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தங்கம் 1 கிராம் 7,260 ஆக விற்பனையாகிறது.
தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ள போதிலும் ஒரு சவரன் அரை லட்சத்தை தாண்டியே விற்பனையாவதால் இல்லத்தரசிகள் இப்போது தங்கத்தை வாங்கலாமா? இன்னும் குறையுமா என்று எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
What's Your Reaction?






