சென்னையில் பரபரப்பு: தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கிய ஏ.கே.47 துப்பாக்கிகள்
சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையின் போது ஏ.கே.47 துப்பாக்கிள் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அசோக் நகர் 2-வது அவென்யூ முதல் தெரு சந்திப்பில் தி. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மகேந்திரா வேன் ஒன்றை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் பத்து ஏகே 47 துப்பாக்கிகள் இருந்ததை கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சோதனையில் அது டம்மி என்பது தெரிந்தது. இது குறித்து வேன் ஓட்டுநர் மகேந்திரன் என்பவரிடம் பறக்கும் படையினர் விசாரித்தனர். விசாரணையில், திரைப்பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் டிசி திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக ஏகே 47 ரக 10 டம்மி துப்பாக்கிகளை சென்னை வடபழனியில் இருந்து சினிமா ஷூட்டிங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
பிறகு பயன்படுத்திவிட்டு அந்த துப்பாக்கிகளை மீண்டும் வடபழனிக்கு கொண்டு சென்று வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் டம்மி துப்பாக்கிகளுக்கான லைசன்ஸையும் காண்பித்ததால் தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு விவரங்களை பெற்று அனுப்பி வைத்தனர்.
300 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கவில்லை
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. சென்னை காவல்துறைக்குட்படடு 24 தொகுதிகள் உள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். மொத்தமாக 2375 உரிமம்பெற்ற துப்பாக்கிகள் உள்ள நிலையில், இதுவரை 1490 உரிமம்பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 300 துப்பாக்கிகள் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. இதில் விளையாட்டிற்காகவும், வங்கி பாதுகாப்பிற்காகவும் வைத்துள்ள 527 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள சென்னை காவல்துறை தகவல்.
What's Your Reaction?

