சென்னை சூப்பர் கிங்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் இன்று பலப்பரீட்சை: தோனி களமிறங்குவாரா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் நாளை பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளனர். இந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியிலாவது தோனி களமிறங்குவாரா என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடந்த 23-ந்தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 103 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது.மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி (23ரன்), கொல்கத்தா (32ரன்), ஆகியவற்றையும் வீழ்த்தி இருந்தது. ராஜஸ்தான் (8 விக்கெட்), பஞ்சாப் (5 விக்கெட்) , பெங்களூரு (43 ரன்), ஐதராபாத் (10 ரன்), குஜராத் ( 8 விக்கெட்) ஆகியவற்றிடம் தோல்வியை தழுவியது.ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி.எஸ்.கே. அணி மும்பையை மீண்டும் வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சேப்பாக்கத்தில் நாளை நடைபெறுவது 5-வது போட்டியாகும். சென்னை அணி சொந்த மண்ணில் முதல் ஆட்டத்தில் தோற்றது. அடுத்த 2 போட்டியில் வெற்றி பெற்றது. 4- வது ஆட்டத்தில் குஜராத்திடம் மோசமாக ஆடி வீழ்ந்தது. மும்பை இந்தியன்சை ஏற்கெனவே தோற்கடித்து இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். சேப்பாக்கத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சி.எஸ்கே. வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஐபிஎல் சீசன் தொடங்கிய நாளில் இருந்து சிஎஸ்கே பங்கேற்ற போட்டிகளில் தோனி விளையாடவில்லை. தசைப்பிடிப்பு காரணமாக உடல்தகுதி பெறவில்லை என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சில நாட்களாக பலபயிற்சியில் ஈடுபட்டு வரும் தோனி. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலாவது விளையாடுவாரா என்ற அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
What's Your Reaction?