அரசு கேட்கும் நிவாரணத்தை கொடுக்க சீமான் வலியுறுத்தல்
நல்வாய்ப்பாக இதில் இஸ்லாமியர் இல்லை. இருந்தால் தேர்தல் வரை இதை வைத்தே ஒட்டி இருப்பார்கள்
வெள்ள நிவாரணத்திற்கு தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள பெரியார் நகர்,முத்தமிழ் நகர்,சுதேசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து 10 நாட்களுக்கும் மேலாகியும் மழை நீர் வடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினார்.
மேலும் முத்தமிழ் நகர் பகுதியில் ஒரு லோடு வாகனத்தில் கொண்டுவர பட்ட அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை சுமார் 300க்கும் அதிகமனோருக்கு இறுதிவரை சீமான் வழங்கி ஆறுதல் கூறினார்.பின்னர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டோருக்கும் உணவு, பெட்ஷீட் ஆகியவை வழங்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தமிழக அரசு வெள்ள நிவாரண நிதி அறிவித்துள்ளது.அரசு குறிப்பிட்டது போன்று இழப்புக்கு ஈடாக நிவாரணம் வழங்குவது தான் சரியாக இருக்கும்.நிவாரண தொகை அளிப்பது இது எப்போது துவங்கி எப்போது முடியும் என்பதும் ஒரு காலவரையரை என்ன என்பதும்தான் கேள்வியாக உள்ளது. மகளிர் உரிமை தொகை போன்று அறிவித்து 2 ஆண்டுகள் பின்னர் அடுத்த வெள்ளம் வரும் வரையும் அமைதியாக இருந்தால் சரி இல்லை.
நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை வீசியவர்களுக்கு எந்த உள்நோக்கம் இல்லையா? விஷ குண்டு, கந்தக குண்டு வீசி இருந்தால் என்ன ஆகிருக்கும் என கேள்வியெழுப்பினார். நல்வாய்ப்பாக இதில் இஸ்லாமியர் இல்லை. இருந்தால் தேர்தல் வரை இதை வைத்தே ஒட்டி இருப்பார்கள் என குற்றம்சாட்டினார்.தேர்தல் நேரத்தில் எல்லாம் செய்வார்கள். இதுபோன்ற சிந்தனை அவர்களுக்கு தான் வரும்.அவர்கள் வீசியது குண்டு இல்லை வண்ணப்பொடி தான்,ஹோலி கொண்டாடி உள்ளனர் என நக்கலடித்தார்.
இந்த விவகாரம் குறித்து அவையில் கேள்வியெழுப்பிய எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு இயலாதவன் வேறு என்ன செய்யமுடியும். இயலாதாவன் தன்னுடைய இயலாமையை கோபமாக திருப்புவான். கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும் தர்க்க அறிவு இருக்கவேண்டும். உண்மை நேர்மை இருக்க வேண்டும்.வேற வழி இல்லாமல் பேச கூடாது வெளியில் போ என கூறுகின்றனர்.பாராளுமன்றத்தில் மக்களவையில் பேச விடவில்லை என்றால் எங்கு பேசுவது. இது கொடும் நடவடிக்கை. இதுவரை எதுவும் விவாதம் செய்யாமல் சட்டம் நிறைவேற்றப்படுகிறது.சர்வாதிகாரம் எனும் வார்த்தை கூறி அந்த வார்த்தையை கொச்சைப்படுத்த வேண்டாம். இது கொடுங்கோன்மை,கொடுமை தான்.
கோவா விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வீரரால் தமிழ் பெண் அவமதிக்கப்பட்ட செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் உன் மொழி உயர்ந்தது போன்று, என் மொழியும் உயர்ந்தது.நான் தமிழ்நாடு முதலமைச்சராகி விட்டால் ஒரு இடத்தில் இந்தி எழுதிட முடியமா? வைத்திட முடியுமா? ஆட்டம் காட்டுவதற்கு ஆளில்லை.அதற்கு ஒரு ஆள் வேண்டும். சண்டை போடுவதற்கு ஆள்வேண்டும். நம் மொழி அவமதிக்கப்படும்போது நமது கோவத்தை உணர்த்த வேண்டும்.அரசு கேட்கும் நிவாரணத்தை கொடுக்க வேண்டும்.வரியும் வளத்தை திருடதான் தமிழ் நாடு உள்ளது.அரசு கேட்பதை மத்திய அரசு தர வேண்டும். எனக்கு கேட்ட நிதித்தரவில்லை என்றால் ஒட்டு போட விடமாட்டேன்.எனக்கு நிதித்தாரதவனுக்கு ஓட்டு எதற்கு என கேள்வி எழுப்பினார்.
What's Your Reaction?