சேதமடைந்த ரயில்வே மேம்பால படிக்கட்டுகள்...! தண்டவாளத்தை கடக்கையில் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்..!
மேம்பால படிக்கட்டுகள் சேதமடைந்ததால், தண்டவாளத்தை கடக்கும்போது, தவறி விழுந்த குழந்தை நூலிழையில் உயிர்த்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் தண்டவாளத்தைக் கடக்கும்போது விபத்துக்கள் ஏற்படுவதால் ரயில்வே துறை சார்பில் தண்டவாளத்திற்கு நடுவே மேம்பால படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மேம்பால படிக்கட்டுகள் அனைத்தும் சேதம் அடைந்ததால் பயணிகள் வெவ்வேறு வழித்தடங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் இருக்கும் நடை மேடைக்கு செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிவேக ரயில்கள் செல்லும் நிலையில் பயணிகள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளதால் ஒரு குடும்பத்தினர் தங்களது குழந்தைகளோடு தண்டவாளத்தைக் கடந்து செல்லும் பொழுது தண்டவாளத்தில் சிறுவன் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
அந்த நேரத்தில் ரயில்கள் ஏதும் வராததால் அச்சிறுவனை அவரது தந்தை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, மேம்பால படிக்கட்டை சரி செய்து பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிக்க | தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! முன்பதிவு தொடங்கியது.!
What's Your Reaction?