சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை...எடப்பாடி பழனிசாமி கண்டனம்...

சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை...எடப்பாடி பழனிசாமி கண்டனம்...

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் மீது ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா, குட்கா முறைகேடு புகார் தொடர்பாக அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் ஓலைமான்பட்டியில் உள்ள தோட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளத்தில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow