திண்டுக்கல் ஐ.ஓ.பி. வங்கியில் தீ விபத்து.. நகை, பணம் என்னவானது?
அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
திண்டுக்கல்லில் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து தீக்கிரையாகின.
திண்டுக்கல் ஆர்.எஸ். சாலையில் செயல்பட்டு வரும் வங்கியில், நேற்று மாலை (மார்ச் 11) வழக்கம்போல் பணிகளை முடித்துவிட்டு ஊழியர்கள் வீடு திரும்பினர். இந்த நிலையில் இன்று (மார்ச் 12) அதிகாலை 4 மணி அளவில் வங்கியில் இருந்து புகை வெளியேறியது. இதைக் கண்ட பக்கத்து வணிக வளாகத்தில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினிகள், மேசைகள் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து தீக்கிரையாகின. சேமிப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பணம், நகைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், தீ விபத்தில் தங்களது பணம் மற்றும் நகைகள் என்னவானது? என்ற பதற்றத்தில் வங்கி முன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?