அவ்வளவு அறிவு...பிறந்த 4 மாதத்திலேயே உலக சாதனை.. அசத்தும் ஆந்திர குழந்தை...
ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் 4 மாத குழந்தை அப்படி என்ன உலக சாதனை படைத்துள்ளது.. பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் நந்திகாமா பட்டணத்தை சேர்ந்த ரமேஷ் - ஹேமா தம்பதியின் மகள் கைவல்யா, 4 மாதமேயான இந்த சுட்டிக்குழந்தை, 120 வகையான பறவைகள், காய்கறிகள், பழங்கள், விலங்குகள் ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். இந்த சாதனையை நிகழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மகளிடம் உள்ள திறமையை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கத்தில் மூன்று மாத வயதிலேயே கருப்பு வெள்ளை புகைப்படங்கள் காட்டப்பட்டதாகவும், நான்காவது மாதத்தில் இருந்து, 120 வகையான விலங்குகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களின் வண்ண புகைப்படங்களை குழந்தையிடம் காண்பிக்கும் போது, குழந்தை ஞாபகம் வைத்துக் கொண்டு கையால் தொட்டு அடையாளம் காட்டுவதாக தாயார் ஹேமா தெரிவித்துள்ளார்.
குழந்தையின் இந்த திறனை வீடியோவாக பதிவு செய்து உலக நோபல் விருது பதிவுகளுக்கு அனுப்பிய நிலையில் குழந்தையின் திறமையைக் கண்டு வியந்த குழுவினர், சிறப்புச் சான்றிதழுடன் 4 மாத சுட்டிக் குழந்தையான கைவல்யாவை சாதனையாளராக அங்கீகரித்துள்ளனர்.
What's Your Reaction?